சேதுபதி
ரவிகுலசேகரன், ரவிவர்மன், சொரிமுத்து வன்னியன் - இதெல்லாம் இராமநாதபுரம் சேதுபதிக்கு இருந்த பட்டங்கள்
கிடைத்த இடம்: இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலில் கிடைத்த பாண்டியூர் சொக்கப்பன் சேர்வை புத்திரன் பெருமாள் சேர்வை செப்பேடு
எழுதப்பட்ட வருடம்: பொது யுகம் 1568ம் ஆண்டு (ஏறத்தாழ நானூற்றைம்பது ஆண்டுகள் முன்பு).
இராமநாதபுரத்திற்கு வடக்கே பத்துக்கல் தொலைவிலுள்ள பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சொக்கப்பன் சேர்வை மகன் பெருமாள் சேர்வை திருமலை சேதுபதி மன்னர் புண்ணியமாக இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் அறக்கட்டளைக்கு சேதுநாட்டின் மேலமாகாண சீமையில் உள்ள ஆனந்தூர் கிராமத்தையும், பாப்பாக்குடியேந்தலையும் தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு குறிப்பிடுகின்றது.
குறிப்பு:
ரவிகுலம்= சூர்யகுலம் (இதற்கும் மற்ற பட்டங்களுக்கும் முரண்பாடு உள்ளது)
வன்னியன்/வன்னியர் = அரசர் அல்லது சிற்றரசர். ஆனால் பட்டங்களுள் ஒன்று ’வன்னியராட்டம் தவிர்த்தான்’ என்றுள்ளது. இங்கே குறிப்பிடுவது மற்ற (வன்னிய) மன்னர்களாக இருக்கவேண்டும்.
சொரிமுத்து வன்னியன் = எதனால் என்று தெரியவில்லை, அர்த்தமும் புரியவில்லை.
ஆரியமானங்காத்தான் = இது சேதுபதிகளின் பாரம்பரிய பட்டம், வேறெந்த தமிழ் மன்னர்/குறுநில மன்னர்களுக்கும் இந்த பட்டம் இல்லை. இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும்: (1) இராமபிரான் கூட வந்த குகர்கள் இலங்கையில் இராவணனுடன் போரிட்டு அவரது மானம் காத்த தொன்மக்கதை (2) இராமேசுவரத்துக்கு யாத்ரீகர்களாக வரும் வடநாட்டவரை காத்தவர்கள்.
ராகுத்தன் = இது வீரர்களுக்கு, குறிப்பாக குதிரை மீதேறி போரிடும் வீரர்களுக்கு இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட பெயர். ஆனால் இதற்கும் குதிரைவணிகர்களான (முஸ்லீம்) ராவுத்தர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. சில இடங்களில் குலதெய்வக்கோவில்களில் இருக்கும் ராகுத்தன் சிலைகளை புணரமைக்கும்போது அறியாமையினால் இஅதை இஸ்லாமியர் போன்று அமைத்துவிடுகின்றனர். வடைந்தியாவிலும் ராவத், ராவுத் போன்ற பெயர்கள் போர்ப்படைகளில் இருந்தவர்களது பட்டப்பெயராக இருக்கின்றன.
நன்றி: தமிழ்நாடு அரசு (தமிழ்மின்நூலகம்)





Comments
Post a Comment